முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்
தமிழ்நாடில் கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.