கவர்ச்சியை தாராளமாக காட்ட தயார் - சுரபி
2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுரபி. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் தமிழில் சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. சில வருடங்கள் கழித்து ஜெய் நடித்த ஒரு படத்தில் நாயகியாக நடித்தார்.
அந்த படத்திலும் இவரது நடிப்பு பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சூழலில் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வர ஆர்வமாக உள்ளாராம். அதற்காக வழக்கமாக நாயகிகள் அதே வழியை கையில் எடுத்துள்ளார்.
எவ்வளவு வேண்டுமானாலும் கிளாமர் காட்டுகிறேன் எனவும், நடிகர்களுடன் படுக்கையறை காட்சி இருந்தாலும் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு மெசேஜ் ஒன்றை தட்டியுள்ளார் சுரபி. தயாரிப்பாளர்கள் தற்போது சுரபியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ரசிகர்கள் இனி சுரபியின் தாராளமான கவர்ச்சியை படங்களில் எதிர்ப்பார்க்கலாம்.