Category:
Created:
Updated:
மூன்றாவது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட்டதாக, ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றாரியோ மருத்துவமனை சங்கம் (ஓஹெச்ஏ) டுவிட்டர் பதிவில், ஒன்றாரியோ மக்களுக்கு மூன்றாவது அலை நம்மீது இருப்பதாகவும், கவலைதொற்றுக்களின் மாறுபாடுகள் செங்குத்தாக உயர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் எச்சரித்துள்ளன.
ஒன்றாரியோ மருத்துவமனை சங்கம் கூறுகையில், கவலை தரும் தொற்றுக்களின் புதிய வகைகள் அதிகரித்து வருகின்றன மற்றும் ஐ.சி.யூ எண்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறியுள்ளது. பொது சுகாதார நடவடிக்கைகளை வலுவாக பின்பற்றுவது அவசியமானதும், அவசரமானதாகவும் உள்ளது.