பெண்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை
தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பெண்களின் நலனை மேம்படுத்த அதிமுக பல திட்டங்களை வகுத்து அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அம்மா வாஷிங்மெஷின், குலவிளக்கு திட்டம், பேருந்து பயணத்தில் 50 சதவீத கட்டண சலுகை, சீர்வரிசை திட்டம் போன்ற பல்வேறு பெண்கள் நலத் திட்டங்களை அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குடும்பத் தலைவிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகத் தந்தார். தற்போது மறைந்த முதல்வரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருட காலமாக உயர்த்தப்படும், மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி, அரசு வேலையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்துதல்.
திருமண உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும், புதுமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் மூலம் பட்டாடை, வெள்ளி கொலுசு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும் என பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அதிமுக தெரிவித்துள்ளது.
மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அறிந்த பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். எனவே இவ்வாறு அத்தியாவசிய தேவையை அறிந்து செயல்பட்டு வரும் அதிமுக அரசை மகளிர் அனைவரும் வரவேற்பதாக தெரிவித்து வருகின்றனர்.