Category:
Created:
Updated:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். தற்போது சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.