இயக்குநருக்கு மருத்து உதவி செய்த விஜய் சேதுபதி
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு, லாபம் என்னும் சமூக சிந்தனை படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் நேற்று முன் தினம் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது இயக்கத்தில் விரைவில் ரீலீஸ் ஆக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் லாபம் படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார்.
தற்போது நடிகர் விஜய் சேதுபதி, இன்று துவங்க இருந்த பொன்ராம் படத்தை ஒத்தி வைத்து மருத்துவமனையில், ஜனநாதன் கூடவே இருக்கிறாராம். அது தவிர ஜனநாதனின் மருத்துவ சிகிச்சை செலவு எல்லாம் விஜய் சேதுபதியே ஏற்று கொண்டாராம். இதனால் இயக்குநரின் குடும்பம் விஜய் சேதுபதியை வாழ்த்தி வருகிறார்கள்.