Category:
Created:
Updated:
விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் மம்தா மோகன் தாஸ்.
புற்றுநோய் சிகிச்சை பெற வேண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு, சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் ராம் இயக்கும் "ஊமை விழிகள்" என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மம்தா மோகன் தாஸ். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறார்.