தமிழகத்தில் 2,682 இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் 2,682 இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் முதியவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டுக் கொண்டார். பின்னர், அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடிய தொற்று நோயாகும். தமிழகத்தில் 2,682 இடங்களில் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப நிலையங்களிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. 924 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்டு 30.47 லட்சமும், கோவாக்சின் 5.67 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். 45 வயதுக்குட்பட்ட பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம், எனக் கூறினார்.