Category:
Created:
Updated:
அமமுக கட்சியின் கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். ஆகையால் சீனிவாசன் அமமுகவில் இருந்து வெளியேறிய முதல் விக்கெட் என்பதால், தேர்தல் நடைபெறுவதற்குள்ளே இன்னும் யார் யார் அந்தக் கட்சியில் விலகுவார்கள்? என்பது குறித்து கட்சிகளிடையே அச்சம் நிலவி வருகிறது.
ஏற்கனவே அதிமுக கட்சியின் ஆணிவேராக கருதப்பட்ட சசிகலாவும் இரவோடு இரவாக அரசியலை விட்டு விலக போவதாக அறிவித்ததும், அமமுக கட்சிக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது.
அதைப்போல் அமமுக கட்சி, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போதுவரை வெளியாகவில்லை.
வரும் சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.