முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவரை கடத்திய வழக்கில் நீதிமன்றில் இன்று (மார்ச், 10) ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு தெரிவித்து குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.