Ads
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மீன் சந்தைக்கு தற்காலிக பூட்டு
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை), பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதுடன், கொரோனா பரவல் உள்ள இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
அண்மையில், புகையிரதத்தில் மோதுண்டு மரணித்த மீன் சந்தையில் பணிபுரிந்த நபருக்கும, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Info
Ads
Latest News
Ads