Category:
Created:
Updated:
பல வருடங்களாக இயக்குநராக இருந்துவரும் செல்வராகவன் தற்போது "சாணிக் காகிதம்" என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
தற்போது சாணிக் காகிதம் படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல் அருகே நடைபெற்று வருகிறது.
இன்று செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காகிதம் படக்குழுவினர் செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஒரு கையில் துண்டு பீடி, மறு கையில் துப்பாக்கி, அறை முழுவதும் ரத்தம், கால்கள் கட்டியபடி ரத்த வெள்ளத்தில் மிதக்கும் பிணம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படுபயங்கரமாக உள்ளது.
சாணிக் காகிதம் படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்கலாம் என செல்வராகவன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.