Category:
Created:
Updated:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.