இத்தாலியில் ஒரேநாளில் 22,865 பேருக்கு கொரோனா தொற்று
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,865 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 339 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 98,974 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பிடித்துள்ளது இத்தாலி.
மேலும் 13,488 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 2,453,706 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 4,23,807 பேர் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 20,157 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் 2,475 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலியில் 4.9 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.