விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் - ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் திருமாவளவன்
திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க முன்வந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் 7 தொகுதிகள் கேட்கப்பட்டது. இதனால், இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கையெழுத்தான ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், விடுதலை சிறுந்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவனவன் அவர்களும் இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்துபேசியதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவுசெய்யப்பட்டது.