Category:
Created:
Updated:
கலைப்போராளியாகப் பயணித்த சண் மாஸ்டர் அழைக்கப்படும் சண்முகம் கிற்லர் கனடாவில் 28-02-2021 அன்று காலமானார். இந்த செய்தி ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்துறை சார்ந்து தமிழ்த் தேசியத்தின் பால் பயணித்த கலைப்போராளியான சண்மாஸ்டரின் பிரிவில் உலகத் தமிழர்களும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
தனக்கே உரித்தான ஆளுமையான குரலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொழுது மக்களைத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்த்துக் கொள்பவர், விளையாட்டுத்துறையினூடாகப் பல இளைஞர்களைச் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.