Category:
Created:
Updated:
இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை வழங்கப்போவதாக இந்திய விமானப் படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்.