டாப்ஸி பன்னு மற்றும் பாலிவுட் பிரபலங்களின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை..!
பாலிவுட் திரை நட்சத்திரங்களான அனுராக் காஷ்யப், விகாஸ் பஹ்ல், நடிகை டாப்ஸி பன்னு மற்றும் மும்பையில் வசிக்கும் பலருடைய வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்துள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பான ஆதாரம் கிடைத்ததையடுத்தது இந்த சோதனை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மோசடி தொடர்பாக மும்பை, புனே மற்றும் பாண்டம் பிலிம்ஸ் வளாகம் உட்பட பல இடங்களில் வருமானவரித்துறை தேடல்களை மேற்கொண்டன. திரைப்படத் தயாரிப்பாளர் மது மந்தேனாவின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்துள்ளது.
அனுராக் காஷ்யப், விகாஸ் பஹ்ல் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோர் சமூக ஊடக தளங்களில் பொதுப்பிரச்சினைகள் குறித்து சர்ச்சையாக பேசி வருகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்பு குறித்தும் தங்கள் கவலையை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாண்டம் பிலிம்ஸ் அனுராக் காஷ்யப், இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானே, தயாரிப்பாளர் மது மந்தேனா மற்றும் யுடிவி ஸ்பாட்பாய் விகாஸ் பஹ்ல் ஆகியோரால் நிறுவப்பட்டது.
முன்னாள் பாண்டம் ஊழியரால் இயக்குனர் விகாஸ் பஹ்லுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் வெளிவந்ததை அடுத்து, 2018 ஆம் ஆண்டில் நிறுவனம் மூடப்பட்டது. தற்போது அங்கு அனுராக் காஷ்யப் தனது குட் பேட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.