கிளி நண்பர்கள் குழாத்தினால் "நடைபயிற்சி" விழிப்புணர்வு நடை பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளி நண்பர்கள் குழாத்தினால் "நடைபயிற்சி" விழிப்புணர்வு நடை பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 5 மணிக்கு கிளிநொச்சி நகரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழிப்புணர்பு நடை பயணம் ஏ9 வீதி ஊடக பரந்தனை சென்றடைந்து, பூநகரி கரடி போக்கு வீதி ஊடாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தை வந்தடைந்தது.18 கிலோ மீட்டர் தூரம் பயணித்த குறித்த நடை பயணத்தின் போது துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.பல்வேறு நோய் தாக்கத்திலிருந்து விடுபட குறித்த நடை பயணம் சிறந்தது எனவும், நாள் ஒன்றுக்கு காலையும், மாலையும் 1 மணிநேரம் நடந்து ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் எனவும் வைத்தியர் குகனேஸ் குறிப்பிட்டுள்ளார்.குறித்த நடைபயணமானது ஆரோக்கியமான வாழ்விற்கு ஏனையோரையும் விழிப்படைய செய்யும் வகையில் கிளி நண்பர்கள் குழாத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.இதில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட பல்துறை சார்ந்தோர் பங்குபற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.பல்வேறு நோயிலிருந்து பாதுகாக்க நடைபயிற்சி இன்றியமையாத ஒன்று எனவும், அதனை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் எனவும் வைத்தியர் குகனேஸ் இதன் போது குறிப்பிட்டார்.