சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலைசெய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலைசெய்யப்பட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.அந்த மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.இதன்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அரச சட்டவாதிவிண்ணப்பம் செய்தார். அதற்கு எதிரான வாதங்களை கண்ணதாசன் சார்பில் ஆயரான சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.இதன்போது இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரசசார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி கட்டளையிட்டார்.குறித்த வழக்கில் ஆயராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது....ஏற்கனவே வவுனியா மேல்நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டு ஆயுள் தண்டனைவழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்முறையிடு ஒன்று செய்திருந்தோம்.அதில் கடந்தவருடம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என்று அந்த தீர்ப்பும் தண்டணையும் புறமொதுக்கப்பட்டன.ஆனாலும் சட்டமா அதிபர் ஒரு மீள் விசாரணை நடாத்துவதற்கான உரித்தை நீதிமன்றிலே தக்கவைத்திருந்தார். ஆதலால் அந்த தீர்ப்பு புறமொதுக்கப்பட்ட பின்னர் கண்ணதாசன் தனது பணியினை மேற்கொண்டுவந்திருந்தார்.திரும்பவும் அந்த வழக்கினை விசாரிப்பதற்காக இன்று நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அரச தரப்பு அவருக்கெதிரான குற்றப்பகிர்வு பத்திரிகையை திருத்துவதற்கு நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்தனர்.அப்படியிருந்த நிலையில் ஒரு மீள் விளக்கத்திற்கு மாத்திரம் தங்களது வழக்கை தக்கவைத்த சட்டமாஅதிபர் வேறொரு குற்றத்திற்காக அவரை விசாரணை செய்ய முடியாது என்ற வாதத்தை முன்வைத்து நாம் ஆட்சேபனங்களை தெரிவித்தோம்.இரு தரப்பினதும் வாதங்களை செவிமடுத்த நீதிபதி குற்றப்பகர்வு பத்திரத்தை திருத்தமுடியாது என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட பின்னரே அரசு தரப்பு இதற்கு மேல் அவர் மீது சாட்சியங்களை முன்வைப்பதற்கு சாத்தியம் இல்லை வழக்கை இதோடு நிறுத்திக்கொள்கிறோம் என்று அறிவித்தனர்.இதன்பேரில் அவர் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி கட்டளையிட்டார். அவர் இன்றுமுதல் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • 725
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads