சினிமா செய்திகள்
என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயது எஸ்.எஸ்.வாசன் இந்திய சினிமாவ
பாடகி வாணி ஜெயராம்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார
அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்
அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் தெலுங்குப் படத்திற்காக சிபா
ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி
ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி... பி.எஸ்.சசிரேகா பற்றி தெரியுமா?1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற
தூக்குதுரை ஓடிடியில் ரிலீஸ் ஆனது
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத்,அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி யோகி பாபு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது"த
சேலையில் கிளாமராக போஸ் கொடுத்த தமனனா
சமீபத்தில் தமன்னா , ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது.
வித்தியாசமான உடையில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
 ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் என்ன தெரியுமா?தமிழ் சினிமாவில் அதுவரை சிற
உதவிக் கேட்டு வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்பாத கலைவாணர்
தமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசிகாலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில்
ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து வெளியேறிய நடிகை
கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் பெரிய
''தங்கலான்'' படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணம்?
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்
பிரபல அரசியல்வாதி நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்தாரா?
பிரபல அரசியல்வாதி ஒருவர் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் ரூபாய் 50 கோடி மதிப்பில் வீடு வாங்கி கொடுத்ததாக அரசியல் விமர்சகர் ஒருவர் தனது யூடியூப் வ
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு தீர்மானங்கள்

அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை இன்றைய தினம் எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடனான கலந்துரையாடலின் பின்ன இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்ர் இவ்விடயத்தை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று மாலை வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் தமிழ்த் தெசிய கூட்டமைப்பை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கூடி இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.வவுனியாவில் அரசாங்க அதிபராக இருந்த பந்துலசேனா எனும் அதிகாரி பந்துல சேனாவாக இருந்தால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய உருத்து எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி கொடுத்து இன்றும் எங்களுடைய இனத்தின் விடுதலை, எங்கள் தேசத்தின் விடுதலை, எங்களுடைய மக்களின் விடுதலையை அடையாது இருக்கின்ற பொழுதும், 13வது திருத்த சட்டத்திலும் கூட மிக அரிதாக இருக்கின்ற சில உரிமைகள் அதைவிட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை உரிமை, தங்களுடைய தேசத்தில், தங்களுடைய மக்கள் மத்தியில், தங்களுடை பிறப்புரிமை தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே நடார்த்த வேண்டும் என்பதை நாங்கள் இன்று நிலைநாட்டி பேசினோம்.வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள். அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும், தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பந்துலசேனாவினுடைய நியமனத்தை திருப்பி பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை செய்வதற்குஅவர்களது மொழியில் நிர்வாகத்தை நடார்த்தக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம்.தமிழ் மக்கள் மத்தியில் தகுதியுடைய எத்தனையோபேர் இருக்கின்றார்கள். சித்தியடைந்தவர்கள், அனுபவம் மிக்க ஆளுமையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிலிருந்து ஒரு பிரதம செயலாளரை வடக்கு மாகாண சபைக்கு நியமிக்க வேண்டும் என்று இன்றைய தினம் இங்கு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல் இருப்பதற்காக நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.எங்களுடைய தேசத்தில் நாங்கள் எங்களை ஆளுவதற்கும், எங்களுடைய பண்பாடு, மொழி, கலை, கலாச்சாரங்களை நாங்களே கையாள்வதற்கும், எங்கள் மக்களையும், தேசத்தையும், ஆட்சி உரிமையையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றாக அணிவகுத்து ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதையும் இன்றைய தினம் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.இவ்விடயம் அடுத்த மாத்திலிருந்து எங்களுடைய பிரதேசங்களிலும், உள்ளுராட்சி மன்ன தலைமைத்துவங்களில் கழு் அவ்வந்த பிரதேச மக்களை சந்தித்து எங்களுக்கு கிடைக்க வேண்டியதும், பெறவேண்டியதுமான உரிமைகள் தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வே்ணடும் என்பதையும் இன்றைய தினம் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.அடுத்த மாத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தலைமைத்துவத்தில் இருக்கின்றவர்கள் இணைந்து முன்னெடுக்க உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் பிரதம செயலாளரின் நியமனம் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஊடாக ஒன்றுபட்டு பிரதம செயலாளரை மாற்றி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய தலைமை நிர்வாகி ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கத்துடுன் பேச வேண்டும்.அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஒன்று கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் இங்கே தீர்மானித்திருக்கின்றோம்.எங்களுடைய உறுப்பினர்கள் மிகத் தெளிவாக இங்கு பல விடயங்களை பேசியிருக்கின்றார்கள். அதில் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவது, வைத்தியசாலை அதிகாரங்களை மத்திய அசின்கீழ் கொண்டு செல்வதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டது.இவ்விடயம் தொடர்பில் மக்கள் மற்றும் கற்றவர்கள் மத்தியிலும் கொள்கை தெளிவில்லாத நிலை இருக்கின்ற நிலையிலும், அவ்வாறு மருத்துவ மனைகளையும், பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் எடுக்க விடாமல் தடுக்க வேண்டும்.ஏற்கனவே பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பாடசாலைகளையும் மாகாண சபை அதிகாரங்களிற்குள் மீள எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அரசியல் தீர்வுக்காக முயற்சிக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்தும் மத்திக்கு அதிகாரங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளிற்கு எதிராகவும் நாங்கள் செயற்பட வேண்டும்.அதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடார்த்த வேண்டுமெனவும், அடுத்த கட்டமாக எவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் இன்றைய தினம் பேசியிருக்கின்றோம்.1956ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தனிச்சிங்கள மொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நீதிமன்றங்களில் சிங்கள மொழிக்காக ஊழியர்களை அனுப்பியபொழுது, தந்தை செல்வாவும், அப்பொழுது இருந்த கட்சி தலைவர்களும் பெரும் போராட்டங்களை நடார்த்தியிருக்கின்றார்கள்.அந்த விடயத்தினையும் நாங்கள் இன்று ஆராய்ந்திருந்தோம். ஆகையினால் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்குள் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 639
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads