Ads
இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் இறுக்கப்பட வேண்டும் சுகாதார அமைச்சு எச்சரிக்கிறது
இலங்கையில் மருத்துவனைகளின் கொள்ளளவு திறன், கொவிட் நோயாளர்களின் தினசரி அறிக்கைகளை கணக்கிலெடுத்து கொரோனா எதிர்ப்பு சட்டங்களை மீண்டும் கடுமையாக்க வேண்டுமென சுகாதார அமைச்சு எச்சரிக்கிறது.
அத்துடன் டெல்டா வைரஸ் பரவல் குறித்து அனைவரும் கவனம் செலுத்தி சுகாதார ஆலோசனைகளின் பேரில் செயற்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தினமும் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் மருத்துவமனைகளின் கொள்ளளவு திறனின் உச்ச மட்டத்தை எட்டும் அபாயம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதா்ஷினி பெர்னாண்டோ புள்ளே கூறியுள்ளார்.
மேலும் நாடு மூடப்பட்டதிலிருந்து கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கூர்மையாக அதிகரிப்பது கடுமையான பிரச்சினையாக உள்ளதாகவும் சுகாதார அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads