யாழ்.அச்சுவேலியில் கோவிலுக்குள் சாமி காவி பூசை வழிபாடு நடத்திய இராணுவம்
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.
ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமி காவியும் உள்ளனர்.
ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்.
(இப்போ சாமியும் போச்சா)