Category:
Created:
Updated:
கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.