Category:
Created:
Updated:
கஞ்சாவுடன் ஒருவர் கைது.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீட்டில் இருந்த சுமார் நூற்று முப்பது கிலோ கஞ்சா கடற்படையினரால் வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது.கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையிலேயே வீட்டில் குப்பைகளுடன் கஞ்சாவை புதைத்து வைக்க முற்பட்டபோதே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடற்படையால் கைது செய்யப்பட்டவரும் கஞ்சாவும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் உள்ளதாகவும் மருதங்கேணி போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.