முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 154ம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் உரிமையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என்ற குடும்பத்தர் என பொலிசார் குறிப்பிடுகின்றனர். குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலிற்கு அமைவாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சடலமாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிள்ளைகள் தொழிலின் நிமித்த வேறுபிரதேசத்தில் வாழ்ந்து வரும் நிலையில் சம்பவம் இடம்பெற்றள்ளது.ஆயினும் உயிரிழப்பு தொடர்பில் பொலிசார் பல்கோண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர். சம்ப இடத்திற்கு தடயவியல் பொலிசாரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலையில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்க எடுத்து செல்லப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.