Ads
கிளிநொச்சியில் மருத்துவர் உட்பட 12 பேருக்கு தொற்று
கிளிநொச்சி மாவட்டத்தில் 13 செவ்வாய் தினம் இரண்டு தடுப்பூசிகளைபெற்றுக்கொண்ட மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுஏற்பட்டுள்ளது என பிராந்திய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் குறைந்திருந்த கொவிட் 19 தொற்று நேற்றையதினம் அதிகரித்துள்ளது. மேற்படி கொவிட் 19 தொற்றாளர்கள் அனைவரும்சமூகத்திலிருந்து தொற்றுக்குள்ளானவர்கள்.எனத் தெரிவித்துள்ள சுகாதாரபிரிவு, பொது மக்கள் அனைவரும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றவதுமிக மிக அவசியம் எனவும் தேவையற்ற நிகழ்வுகள், தேவையற்ற வெளி நடமாட்டங்கள்என்பவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பினும் சுகாதார நடைமுறைகளைகடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads