சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை
அண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா
வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின
இளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்
மராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ
பிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது
விஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக
சர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ
ரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்
2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக
ரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்
இந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு
நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்
பணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்
மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர
மாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்
தனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்
அஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி
Ads
 ·   · 616 news
  •  · 14 friends
  •  · 14 followers

வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது

வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.


இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.


இந்நிலையிலேயேஇ 2016இ 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்றுஇ அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக் கூட்டு நிறுவனம்இ கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.


கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.
எனவே   நாரா - நக்டா - கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என்று அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அதேவேளை எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.
அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன். அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன்.


இவ்வாறான நிலையில்தான் கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.
இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.


மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் தன்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 0 0 0 0 0
  • 355
Attachments
Comments (0)
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads