இருபத்தெட்டாயிரத்து எழுனூற்று நாற்பத்துநான்கு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட அம்பகாமம் தச்சடம்பன் ,கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளில் பதினாறு இலட்சத்து எண்பத்தொராயிரத்து இருநூற்று அறுபத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் (1681261) இருந்து இருபத்தெட்டாயிரத்து எழுனூற்று நாற்பத்துநான்கு (28744) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.13-07-2021 ஸார்ப் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (ளுர்யுசுP)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஜீலை மாதம்; 13 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பதினாறு இலட்சத்து எண்பத்தொராயிரத்து இருநூற்று அறுபத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் (1681261) இருந்து இருபத்தெட்டாயிரத்து எழுனூற்று நாற்பத்துநான்கு (28744) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.