இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மறைவு - தலைவர்கள் இரங்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கு உதவிய யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யாஷ்பால் சர்மா பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தார். 70, 80களில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த இவர், 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 66 வயதாகும் அவர், 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இரு அரைசதங்கள் அடித்தார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு தலைசிறந்த வீரர் மறைந்தது வேதனை ஏற்படுத்தி உள்ளது.