கண்டாவளை பிரதேச சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கனகராயன் ஆற்றுப்பகுதியில் மேற் கொள்ளப் பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று (09-07-2021) இராணுவ அதிகாரிகள் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டதுடன் தொடர்ந்து ராணுவத்தினருடன் உதவியுடன் குறித்த பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணழ்வுகளைத் தடுப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆறு மற்றும் புளியம்பொக்கணை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ராணுவத்தின் உதவியுடன் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றனதற்போது கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கனகராயன் ஆற்றுப் பகுதியிலும் அதனை அன்மித்த பகுதிகளிலும் கனரக வாகனங்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டதுஇதனையடுத்து குறித்த மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் மற்றும் அந்தப் பகுதிக்கு பொறுப்பாகவுள்ளை இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று (09-07-2021 )பிற்பகல் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் இராணுவ காவலரண்களை அமைத்து மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் 20 அடி ஆழத்திற்கும் மேலாக சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்ட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.