இலங்கையில் 1,883 பேருக்கு கொரோனா தொற்று : 43 மரணங்கள் பதிவு..!
நாட்டில் நேற்று 1,883 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது. புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து 815 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியிருந்த 68 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (01) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 342 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.
இதையடுத்து, தொற்றுறுதியானவரக்ளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 60 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 55 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், நாட்டில் மேலும் 1, 888 பேர், நேற்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.
இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்றூன பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் (30) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில், 16 பெண்களினதும், 27 ஆண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.
30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 3 பெண்களும், 3 ஆண்களும் மரணித்தனர்.
60 வயதிற்கு மேற்பட்ட 13 பெண்களும், 24 ஆண்களும் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.