Ads
கொழும்பு றோயல் கல்லூரியின் 1980 ஆண்டு உயர் தமிழ் மாணவர்களின் உதவியில் 500 பெறுமதியான உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நாவல் நகர் கிராமத்தில் நலிந்து வாழும் 50 குடும்பங்களுக்கு தலா 2500 பெறுமதியான உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.கொழும்பு றோயல் கல்லூரியின் 1980 ஆண்டு உயர் தமிழ் மாணவர்களின் உதவியில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் குறித்த பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க, 572 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கிராம சேவையாளர், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads