நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சௌபாக்கியா வாரம் தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது.
நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சௌபாக்கியா வாரம் தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது.இம்மாதம் 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை சௌபாக்கியா வாரம் தேசிய நிகழ்ச்சித்திட்டமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2 லட்சம் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மே்படுத்தும் தேசிய வேலைத்திட்டமாக குறித்த நிகழ்ச்சித்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் பிரமந்தனாறு பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன். மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் இணைப்பாளர் வை.தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 240 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் 45 ஆயிரம் பெறுமதியான வாழ்வாதார உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.மேலும் 2021, 2022ம் ஆண்டுக்கான சிப்தொற புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதாக கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.இதேவேளை சமுர்த்தி பயனாளிகளிற்கான இலவச மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.