தினமும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் சிறு தானிய செய்கை மரவள்ளி வாழை,பலா என பேரழிவை ஏற்படுத்தி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு .
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் தினமும் காட்டுயானைகளின் அட்டகாசத்தின் மத்தியில் தாம் பல அனுபவித்து வருவதாக மக்கள் பலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தற்பொழுது நாட்டில் பயணத் தடை நீக்கப்பட்டிருந்தாளும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறு தானிய செய்கை மரவள்ளி வாழை,பலா என பல பயிர்கள் மேற்கொண்டு இருந்தபோதிலும் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக அன்றைய 01.07.2021 தினம் 9 மணியளவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் பயன்பெறக்கூடிய பல பயிர்களை அளித்துள்ளது பலா காய்கள் மரவள்ளி மற்றும் தென்னை மரங்களை முற்றாக அழித்து தொடர்ச்சியாக தாம் துயரை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தொலைத்தொடர்பு மூலம் தொடர்பினை ஏற்படுத்திய போதிலும் தொலைவு காண நமது ஊரில் கவரேஜ் இல்லாத காரணத்தினால் உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொடர்பை பல முறை முயற்சித்து தொடர்பினை மேற்கொண்டாலும் உரிய அதிகாரிகள் எம்மை வந்து தொடர்பு கொள்வதும் இல்லை. கிராமசேவையாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவர்களுக்கும் தொடர்பினை மேற்கொண்ட போதிலும் எந்த தீர்வையும் பெற முடியாத நிலை நமது பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வீதி மின் விளக்குகளும் தற்பொழுது ஒளிர இதன் காரணமாகவும் காட்டுயானைகள் இலகுவாக ஊருக்குள் அத்துமீறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். .இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.