முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தீர்க்கப்படாத காணி பிணக்குகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தீர்க்கப்படாத காணி பிணக்குகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்றது.இதன்போது நீண்ட காலமாக தமது காணிப் பிணக்குகள் நீர்க்கம் படவில்லை எனவும், நடமாடும் சேவைகளில் தீர்க்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவும் இல்லை எனவும் முறிகண்டி பிரதேச காணி பிணக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவிலிருந்து வந்து ஆண்டுகள் பல ஆகியும் நிரந்தர இடமும் வீடுமின்றி உறவினர் வீடுகளில் தங்கி வாழ்வதாகவும், தமது காணி பிணக்குகளை தீர்த்து நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்சினையால் மன உலைச்சலுக்கு ஆளான தனது தந்தை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாகவும், தாய் மற்றும் சகோதரர் காணி இல்லாது சிரமங்களுடன் வாழ்வதாகவும் ஊடக சந்திப்பில் பெண்ணொருவர் குறிப்பிட்டார்.காணி உரிமை கோடும் ஆவணங்கள் இருந்தும் நீண்ட காலமாக தொடரும் காணிப்பிணக்குகளை தீர்த்து நிம்மதியான வாழ்வுக்கு வழிசெய்யுமாறு ஊடக சந்திப்பில் காணி பிணக்காளர்கள் தெரிவித்தனர்.இதேவேளை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 30 க்கு மேற்பட்ட காணிப் பிணக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கி கிடக்கும் நிலையில், வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அரச சலுகைகள் இல்லாது பல குடும்பங்கள் வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது