இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன என பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்
இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன என பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓய்வுநிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மொகமட் சாட் கற்றக் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி இராணுவ தமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவை இன்று (29-06-2021) மாலை சந்தித்த அவர் இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியசவில்கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.நான் கடமையில் இருக்கின்ற ஒருவனாகவே உணர்கின்றேன் நான் இங்கு கடமையாற்றுவது என்னுடைய திறமையை மட்டுமல்ல இங்குள்ள அனைத்து மக்களுக்கும் மக்களுக்குமான சேவை ஆற்றுவது என்னுடைய கடமையாகும் தீவிரவாதம் பற்றி பேசுகின்ற போது முதலாவதாகவும் கடைசியாகவும் பாதுகாப்பு பற்றி பேசுவதாகவும் காணப்படுகின்றதுஇதற்கு இலங்கை தான் முதல் உதாரணமாகும் இலங்கையும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாகவும் பொருளாதார உதவிகளை வழங்குகின்ற நாடுகளாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் ஏனைய உதவிகளை வழங்கும் நாடுகளாகவும் இருந்து வருகின்றன.நாட்டினுடைய சொந்த பாதுகாப்புக்கு பாதுகாப்புப் படைகள் தான் முன் நிற்கின்றன அவர்கள் முன் நிற்பதால் காரணமாகத்தான் ஏனைய மக்கள் நாட்டின் வளங்கள் உடமைகள் பாதுகாக்கப்படுகின்றனநான் ஒரு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் நபராவேன். இலங்கையில் பௌத்தர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்களும் வாழ்கின்றனர். ஆனால் பாதுகாப்பு பற்றி பேசும் போது நாங்கள் மிகவும் நெருக்கமாகவும் விரிவாகவும் அதைப் பார்க்கவேண்டும். 2005ஆம் ஆண்டிலிருந்து எங்களது வளர்ச்சி காணப்படுகின்றது நான் என்னைப் பாதுகாக்கும் நோக்கம் காணப்படுவதோடு நாட்டின் அனைத்து தேவைகளையும் பாதுகாப்பதே எனது நோக்கமாகும். அதுபோலவே இலங்கை பாதுகாப்பு படைகளும் நாட்டினை பாதுகாப்பும் பாதுகாக்கும் சிறப்பை உடையவர்களாக காணப்படுகின்றனர் அதன் மூலம் தான் அனைத்து நாட்டினுடைய அனைத்தையும் பாதுகாக்க முடியும். நான் தலைமைத்துவம் பற்றி பேசும்போது இலங்கையும் பாகிஸ்தானும் மிகவும் நெருக்கமான தலைமைத்துவத்தை கொண்ட நாடாகவே நான் கருதுகின்றேன் இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடாகவும் 1976ஆம் ஆண்டிலிருந்து நெருக்க நாடாகவும் இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் அனைத்து பாதுகாப்பு ரீதியாக இணைந்த நாடுகளாகவே காணப்படுகின்றன என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.