Category:
Created:
Updated:
பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓய்வுநிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மொகமட் சாட் கற்றக் இன்று கிளிநொச்சி விஜயம் மெற்கொண்டிருந்தார்.இரணைமடு இராணுவ தமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவை சந்தித்த அவர் இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியசவில் நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டார்.இதன்போது இருநாட்டு நட்புறவையும் வெளிப்படுத்தும் வகையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.