சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு பகுதி மீனவர்கள் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும் சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்றைய தினம் குறித்த கடலட்டை பண்ணையில் சீனனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான அடையாளங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது.அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.குறித்த பகுதியானது ஆரம்பத்தில் பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அப்பகுதி கல்முனை என அழைக்கப்படும் பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல் பண்ணையானது அமைந்துள்ள இடம் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறான நிலையில் குறித்த பகுதி கால காலமாக தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி எனவும், அப்பகுதியிலேயே அவர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதேவேளை குறித்த சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். குறித்த பகுதியில் சீன நாட்டவர்கள் தங்கி நின்று கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். மக்கள் பிரதிநிதிகள் கள விஜயம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், குறித்த பகுதியை கஜேந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டனர்.