Category:
Created:
Updated:
கல்லாறு கிராமத்தில் 100 குடும்பங்களிற்கு உலருணவு பொதி வழங்கி வைக்கப்பட்டள்ளது. நளின் இன்போமேசன் ரெக்னோலஜி நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்ஜீவ் அவர்களினால் தலா 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ப்பட்ட புன்னைநீராவி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கல்லாறு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களிற்கு குறித்த உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளர் அஜித் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், 572 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நிசாந்த, நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறித்த பொதியினை வழங்கி வைத்தனர்.