ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி செலுத்தியதால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றும் பதட்டம் காரணமாகவே 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி செலுத்தியதால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றும் பதட்டம் காரணமாகவே இந்த நிலைமைக்கு ஆளாகியதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு பாரிய ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் ஒவ்வாமை காரணமாக 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வகையில் அமைந்திருக்கின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் கொவிட் பரவல் காரணமாக குறித்த தொழிற்சாலையை மூடுமாறு தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்தநிலையில் ஆடைத் தொழிற்சாலைக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கின்ற தடுப்பூசிகளின் முதற்கட்டமாக களப் பணிகளில் ஈடுபடுகின்ற மற்றும் ஆடை தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்குவதாக கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இவ்வாறு தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 46பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் மற்றும் நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் தொடர்ந்தும் வைத்தியசாலைக்கு மேலும் சிலர் அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையியே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் அவர்களை தொடர்புகொண்டு வினவியது குறித்தஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற 46 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இதில் பதினைந்து பேர் மாத்திரமே விடுதியில் தங்கியிருக்கின்றனர். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட வைத்திய வைத்தியர் அவர்கள் பதட்டம் காரணமாகவே இந்த நிலைமைக்கு ஆளாகிதாகவும் விடிதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 15 பேருக்கும் எந்த விதமான பாதிப்புகள் இல்லை எனவும் இன்னும் சில மணி நேரங்களில் அவர்களும் விடுவிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.