Category:
Created:
Updated:
இன்று 22-06-2021 பாராளுமன்றில் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து சுகாதார அமைச்சர்கெளரவ பவித்திரா வன்னியராச்ச்சி அவர்களை சந்தித்து PCR இயந்திரத்தின் அவசர தேவையினை தெரிவித்ததையடுத்து உடனடியாக குறித்த அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் வவுனியாவிற்கு வழங்கும்படி பணிப்புரை வழங்கினார்.
அதேசமயம், வருகிற மாதம் ஆரம்பத்தில் கட்டாயம் PCR இயந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தார். தான் ஏற்கனவே கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளை வவுனியாவிற்கு அனுப்பி வவுனியா வைத்தியசாலை ஆய்வுகூடத்தினை பார்வையிட்டதையும் குறிப்பிட்டார்.