கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகளுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் யாவும் அரைகுறையாகவே காணப்படுகின்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018ம் 2019ம் ஆண்டுகளில் வீடுகளற்ற குடும்பங்கள் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 5147 குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதும் அந்த வீடுகளை முழுமைப் படுத்துவதற்கான நிதி இதுவரை வழங்கப்படாத நிலையில் குறித்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேறிய குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களின் ஊடாக கடந்த காலங்களில் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட சுமார் 5147 வீடுகளுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் யாவும் அரைகுறையாகவே காணப்படுகின்றது.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2018 ஆம் ஆண்டு மாதிரி விட்டுவிட்டு திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 637 வீடுகளும் 2019ஆம் ஆண்டு இரண்டாம் கட்டமாக 724 வீடுகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2438 குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டன சவட்ட செவன திட்டம் சம்ப செவன திட்டம் மற்றும் மானிய மற்றும் கடன் திட்டம் உள்ளடங்கலாக சுமார் 5147 வீடுகள் கடந்த 2018 2019 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.
இதற்கான முதற்கட்ட கொடுப்பனவு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாததால் இந்த வீடுகளை அதன் பயனாளிகள் முழுமைப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
கிளிநாச்சி மாவட்டத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இவ்வாறு இந்த வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வீட்டு திட்டங்களுக்கான நிதி முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் யாவும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
குறித்த 5147 வீடுகளையும் கட்டி முடிப்பதற்கு 1958 மில்லியன் ரூபா நிதி தேவையெனவும் இந்த நிதி கிடைக்கும் பட்சத்தில் குறித்த வீடுகளை கட்டி முடிக்க முடியும் என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 460 வீடுகளுக்கான ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.