தட்டையர் மலை - முத்தையன் கட்டு வீதி இராணுவம் மற்றும் பிரதேச வாசிகளின் பங்களிப்புடன் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட தட்டையர் மலை - முத்தையன் கட்டு வீதி இரானுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட முத்தையன் கட்டு தடடையர் மலை வீதி மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் பாரிய குன்றும் குழியுமாக கானப்பட்டதுடன் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் தொடர்சியான கோரிக்கைகளை முன் வைத்து வந்துள்ளனர்.குறித்த வீதி இரானுவத்தின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் பிரதேச வாசிகளின் பங்களிப்புடன் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவினர் வீதி புனரமைப்புக்கு அவசியமான கனரக வாகனங்கள் மூலம் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தனர்
என்றும் புனரமைப்பு பணிகளுக்கு உள்ளூர்வாசிகளும் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.