ஆறு மில்லியன் சுற்றுலாமையம் பயன்பாடு இன்றி காணப்படுவதாகவும் பொருட்கள் களவாடப்பட்டதாகவும் மக்கள் குற்றசாட்டு.
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் சுமார் ஆறு மில்லியன் ரூபாசெலவில் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா மையம் இன்றுவரை எந்தவித பயன்பாடு இன்றி காணப்படுவதாகவும் இதில் உள்ள பொருட்கள் களவாடப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில்; சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இயற்கையிடமாகவும் பருவ காலங்களில் பல்வகையான பறவைகளின் வருகை கொண்ட இடமாகவும் காணப்படும் வன்னேரிக்குளத்தினை அண்டிய பகுதியை சுற்றுலா மையமாக அமைக்குமாறு பல்வேறு தரப்பினரும் காலம் காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியின் மூலம் சுமார் ஆறு மில்லியன் ரூபாசெலவில் கரைச்சிப்பிரதேச சபையினால் நிர்மானிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்த வைக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா மையம் இன்றுவரையும் எந்தவித பயன்பாடும் இன்றி அதன் மின்இணைப்புக்கள் சேதமாக்கப்பட்டும் அங்கு காணப்பட்ட பொருட்கள் களவாடப்பட்டும் உள்ளன.கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக எந்தவித பயன்பாடும் அற்ற ஓர் அற்ற ஓர் கட்டடங்களாகவே இது காணப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.