Ads
முல்லைத்தீவு பாலை பாணி பகுதியில் நேற்றிரவு காட்டுயானைகளால் பதினைந்து ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணிக்கிராமத்தின் பிள்ளையார் குளத்தின் கீழ் இவ்வாண்டு 30 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇந்நிலையில் நேற்றிரவு குறித்த வயல் நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் பெருமளவான ஏக்கர் வயல் நிலங்களை சேதப்படுத்தியுள்ளன.இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த பிரதேசத்திற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த போதும் இதுவரை தமது பகுதிக்கான யானை வேலிகள் அமைத்து தரவில்லை என்றும் இதனால் இவ்வாறு தொடர்ச்சியாக அழிவுகளை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads