உடையார்கட்டு பகுதிகளில் காட்டுயானைகள் தென்னை மரங்களை அழித்துள்ளதுடன் பொதுமக்களையும் விரட்டியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு தேராவில் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு புகுந்த காட்டுயானைகள் பெருமளவான தென்னை மரங்களை அழித்துள்ளதுடன் பொதுமக்களையும் விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு தேராவில் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (15-06-2021) காட்டுயானைகள் புகுந்து பெருமளவான தென்னை மற்றும் பயன் தரும் மரங்கள் தோட்டப் பயிர்களையும் அழித்துள்ளன..இரவு புகுந்த யானைகளை மக்கள் விரட்டியபோதும் மக்களை யானை விரட்டியதாகவும் இதனால் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் ஆபாய நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த பிரதேசத்தில் யானைவேலிகளை அமைத்துத்தர தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளன.