சினிமா செய்திகள்
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
பாரதிராஜாவிற்கு சிவாஜி கணேசன் கூறிய அறிவுரை
சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா ந
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெ
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
Ads
 ·   ·  2798 news
  •  ·  1 friends
  • 2 followers

யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரம்

வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் யாழ் மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.

136 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        யாழ் மாநகரசபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கவுசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் ராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        பருத்தித்த்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

·        சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

·        ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

·        நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

·        வேலனைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

·        வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

·        வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

·        வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ இலங்கை கொம்முனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

·        வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும்இ தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

·        சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்

  • 927
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads