Category:
Created:
Updated:
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம், இன்று முற்பகல் 11.30 க்கு நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வேதன முரண்பாடுகளுக்கு தீர்வு காணக் கோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இந்தநிலையில், இது தொடர்பாக இன்று நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
000