சினிமா செய்திகள்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
Ads
 ·   ·  2391 news
  •  ·  1 friends
  • 1 followers

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் தனது 82 ஆவது வயதில் காலமானார் – ஞாயிரன்று இறுதிக்கிரியை

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82 ஆவது வயதில் காலமானார்.

தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) காலமானார்.

இறுதிக் கிரியைகளை மாவிட்டபுரத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

முன்பதாக யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா தனது உறவுமுறை 'பவானி' என்பவரை திருமணம் செய்தார். மேலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டுமுதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் மாவை சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 ஆவதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (தவிகூ) - 2,820 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்படவில்லை.

2000 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (தவிகூ ) - 10,965 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.

2001 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (தவிகூ) - 33,831 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.

2004 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் - (ததேகூ) - 38,783 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.

2010 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (ததேகூ) - 20,501 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.

2015 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (ததேகூ) - 58,782 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.

2020 நாடாளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (ததேகூ) - 20,358 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

  • 241
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads